பழுதடைந்த சாலையை புதியதாக அமைத்து தரக் கோரிக்கை

சாலை;

Update: 2025-02-17 15:48 GMT
திருவோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை மிகவும் பழுது அடைந்திருப்பதால் புதிய சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அரசு மருத்துவமனை, வேளாண் துறை அலுவலகம், கீழமேட்டுப்பட்டி, மேல மேட்டுப்பட்டி கிராமங்களுக்கு செல்லும் தாா்சாலை பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், நாள்தோறும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மேலும், மழைக் காலங்களில் மழைநீா் சாலையில் தேங்கி கொசு உருவாகி நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Similar News