பேராவூரணியில் வேகத்தடை அமைத்து தரக் கோரிக்கை

கோரிக்கை;

Update: 2025-02-17 15:54 GMT
பேராவூரணி சேதுசாலை வளைவில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. மேலும் அதன் அருகிலேயே நாட்டாணிக்கோட்டை, முனிக்கோயில் செல்லும் சாலையும் உள்ளது. இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன.பேராவூரணியில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் முக்கியச் சாலையாக உள்ள இந்தச் சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பேருந்து, காா் , லாரி மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன . சேதுசாலை பெட்ரோல் நிலையம் அருகில் சாலை வளைவில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகத்தில் வந்து திரும்புகின்றன. அதிவேகமாக வரும் வாகனங்கள், பெட்ரோல் போடுவதற்காகவும், குடியிருப்பு பகுதிகளுக்கு திரும்பும் போதும் எதிரே வரும் வாகனங்களின் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.   எனவே, இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் நிலையத்திற்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமின்றி கடந்து செல்லும் வகையிலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

Similar News