தஞ்சையில் இரவு, பகலாக நடந்த மாவட்ட அளவிலான ராஜூ, கவுசல்யா நினைவு இறகு பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடக்க விழாவில் ரஜினி கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் ஜெய்சதீஷ், பாலமுரளி, அம்ரித், வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழக்கறிஞர் ராஜ்குமார் நினைவு கோப்பை மற்றும் ரொக்க பரிசை வழங்கினார். முதல் பரிசு பெற்ற ரேகன் மற்றும் சூர்யாவிற்கு ராஜீ. கவுசல்யா குடும்பத்தினர்கள் சார்பாக ரஜினி கணேசன், ஆடிட்டர் ரவிச்சந்திரன், பிரிதிவிராஜ், அபிநயா ஆகியோர் ஒன்றிணைந்து நினைவு கோப்பையுடன் ரூ.8 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கினர். 2ம் இடம் பெற்ற கவுசிக் மற்றும் கவுசிக் ஆகியோருக்கு வெங்கடேசன் ஆறுமுக நாடார் அண்ட் சன்ஸ் வெங்கடேசன் பரிசளித்தார். மூன்றாம் இடம் பெற்ற சரண் மற்றும் சாய் ஆகியோருக்கு எஸ்விஆர் டெக்ஸ்டைல்ஸ் செந்தில்குமார் பரிசு வழங்கினார். 4ம் இடம் பெற்ற பிரித்விராஜ் மற்றும் விஜய் ஆகி யோருக்கு ரத்னா ஜுவல்லரி சரவணன் பரிசு வழங்கினார். 40க்கும் மேற்பட்ட (இரட்டை பிரிவு) வீரர்கள் பங்கேற்றார்கள். தஞ்சை, நாகை, திருவாரூர், கும்பகோணம், பாபநாசம், பூதலூர் ஆகிய ஊர்களில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். ஆடிட்டர் ரவிச்சந்திரன் நன்றி கூறி னார்.