தென்காசியில் திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்கள்

திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்கள்;

Update: 2025-02-18 05:15 GMT
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் அருண்பிரபு உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், ஒன்றிய துணை செயலாளர் டால்டன், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொருளாளர் வைரசாமி, பொறியாளர்அணி முன்னாள் துணைத்தலைவர் கபில்தேவதாஸ், மாவட்ட தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளர் சத்தியராஜ், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், ஒன்றிய பிரதிநிதி குருசிங், சாமுவேல், சிவன்பாண்டி, சின்னத்துரை, முருகன், கணேஷ், நல்லையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News