ஆழ்வார்குறிச்சியில் கருத்தப்பிள்ளையூரில் யானை அட்டகாசம்

கருத்தப்பிள்ளையூரில் யானை அட்டகாசம்;

Update: 2025-02-18 05:27 GMT
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் கடனா அணை செல்லும் வழியில் உள்ளது. இன்று அதிகாலை அவரது தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை இரண்டு தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தது. இதை தொடர்ந்து அருகில் உள்ள முத்துசாமி என்பவரது தென்னை மரங்களை ஒற்றை யானை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. உடனே வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்தப் பகுதியில் சுட்டு தெரியும் யானைகளை விரட்டி விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News