ராமநாதபுரம் களரி திருவிழாவுக்கு காப்பு கட்டுதல் தொடங்கியது
கமுதி அருகே கோட்டைமேடு ஸ்ரீகோட்டை முனீஸ்வரர் கோயில் 48வது மாசிக் களரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டைமேட்டில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை முனீஸ்வரர் கோயில் 48வது மாசிக் களரி 12 நாள் திருவிழா துவங்கியது. முன்னதாக மூலவர் கோட்டை முனீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி ,பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகூர்த்த காலுக்கு சந்தனம், மஞ்சள் பூசி, வேப்பிலை, நவதானியம் ஆகியவற்றை மஞ்சள் துணியில் கட்டி மேளதாளங்கள் முழங்க, வா ன வேடிக்கையுடன் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் மஞ்சள் கயிறு காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். இதில் கமுதி ஆயுதப்படை காவலர்கள், கோட்டைமேடு அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது