மின் மாற்றிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மூன்று லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதம்
குமாரபாளையத்தில் மர்ம நபர்கள் சிலர் மின் மாற்றிக்கு தீ வைத்ததால் மூன்று லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதமானது. இது குறித்து மின் வாரியம் சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கபட்டுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மர்ம நபர்கள் சிலர் மின் மாற்றிக்கு தீ வைத்ததால் மூன்று லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதமானது. இது குறித்து மின் வாரியம் சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கபட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் முருகானந்தம் போலீசாருக்கு கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் உள்ள ஆர்.டி. பில்டிங் அருகில், மின்வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றி உள்ளது. பிப். 15 காலை 05:30 மணியளவில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் மின்மாற்றி, பில்லர் பாக்ஸ் தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு 2 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதே போல், சரவணா தியேட்டர் எதிரில் வணிக நிறுவனத்திற்கு தீ வைத்தனர். இதனால் மின் அளவிகள், ஆறு சர்வீஸ் கேபிள்கள் சேதமானது. தீ வைத்து மின்வாரிய பொருட்களுக்கு சேதம் விளைவித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.