தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட மங்கோலியா நாட்டு பெண்
ஆச்சரியத்தில் ஆழ்ந்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி பொதுமக்கள்;
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மென்பொருளாளராக மங்கோலியா நாட்டில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில், மங்கோலியா நாட்டை சேர்ந்த ஓயும்மா என்பவரும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, ஓயும்மா வீட்டில் சம்மதத்தை பெற்றனர். ஒரு மாதத்திற்கு முன், காதலர்கள் இருவரும் ஒன்றாக இந்தியா வந்து, சக்திவேல் வீட்டில் தங்கி இருந்து சக்திவேல் பெற்றோர்கள், உறவினர்களிடம் சம்மதம் பெற்றனர். இந்து முறைப்படி வேதாரண்யம் அங்காளம்மன் ஆலயத்தில், சக்திவேல், ஓயும்மா திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணத்தை, ஆசிரியர் அமிர்தலிங்கம் தலைமை வகித்து நடத்தி வைத்தார். திருமணத்தில், ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மங்கோலியா நாட்டு பெண், தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.