பாரபட்சமின்றி, கல்விக்கான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்காவிட்டால்

மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்- தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை;

Update: 2025-02-18 13:42 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் நிதியை ஒதுக்க முடியாது என்று அறிவித்திருக்கும் மத்திய அமைச்சரை கண்டிக்கிறோம். மத்திய அமைச்சர் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். பாரபட்சமின்றி, கல்விக்கான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மாநிலங்களின் சுய சார்பான கல்விக் கொள்கையை ஊக்கப்படுத்தும் வகையில், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கல்விக்கான நிதியை மத்திய அரசு ரூ.2151 கோடி விடுவிக்காததால், தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கபடுவதுடன், கிராமப்புற பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படும். மத்திய அரசு நிதியை ஒதுக்காத நிலையிலும், மாநில அரசு தற்போது அதன் நிதியிலிருந்து சம்பளம் கொடுக்கிறது. இருப்பினும் மத்திய அரசு உடனடியாக கல்விக்கான நிதியை வழங்க வேண்டும். நிதியை வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்தால், மத்திய அரசு அலுவலகங்களின் முன்பாக, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News