தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், களத்தூர் கிராமத்தில் தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கிராமப்புற பயிற்சி துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், அக்ரி சண்முகவேலு, ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண் கல்லூரி மாணவர் சயீத் யாசின் வரவேற்றார். இவ்விழாவில், பேராவூரணி வட்டாரத்தில் சாகுபடி செய்து வரும் பயிர்கள், நடப்பில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விவசாயிகள் பயிர் சாகுபடி தொடர்பான தங்களது அனுபவங்களை வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண்மை தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல்முறை அடிப்படையில் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மரங்கன்றுகள், தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிறைவாக வேளாண் கல்லூரி மாணவர் ரிஷிகேஷ் நன்றி கூறினார்.