ராமநாதபுரம் கடத்தல் ஈடுபட்ட மூன்று பேர் கைது
இடையார் வலசை அருகே 1600 கிலோ பீடீலைகள் பதப்படுத்தப்பட்ட சுறா மீன் இறக்கைகள் பறிமுதல்;
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இந்நிலையில், சட்டவிரோதமாக பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த உள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இடையர் வலசை சந்திப்பு அருகில் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த TN 39 CH 9891 Ashok Leyland வாகனத்தை சோதனை செய்த போது, மேற்படி வாகனத்தில் சுமார் 1680 கிலோ பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணை செய்ததில், மேற்படி வாகனத்தின் ஒட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் சலீம் மாலிக் (35/25), த/பெ மீராஜா, மேற்குதெரு, மண்டபம் என்பவர் என தெரியவந்தது. பின்னர் மேற்படி நபருடன் உடந்தையாக இருந்த முகமது ஹக்கீம் (30/25) த/பெ ஷேக் அப்துல் காதர், வடக்குதெரு, மண்டபம், ராமநாதபுரம் நபர் கைது செய்யப்பட்டு, பஜார் காவல் நிலைய குற்ற எண்.42/2025, U/s 123, 132 BNS ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்படி வழக்கின் தொடர்ச்சியாக இன்று (18.02.2025) விஜய் ஆனந்த் (42/25) த/பெ.கருப்பையா, 2வது தெரு, சேதுபதி நகர், ராமநாதபுரம், என்பவர் கைது செய்யப்பட்டு வீட்டை சோதனை செய்தததில், அவரின் வீட்டில் பதுக்கி இருந்த பீடி இலைகள் சுமார் 1133 (64 பெட்டி) கிலோ, பதப்படுத்தப்பட்ட சுறாமீன் இறக்கைகள் 47 (சிறிய துண்டுகள்) மற்றும் 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.