வருவாய்த்துறை அலுவலர்களுக்கு விதிப்படி வேலை வழங்காமல் 10 மணி நேரம் வேலைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், இ பி எம் எஸ் என்ற ஆன்லைன் பதிவை மேற்கொள்ள நடைமுறை சிக்கல் உள்ளதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த மூன்று ஆண்டுகளாக துணை ஆட்சியர் பட்டியலை வெளியிடாமல் உள்ளதை உடனே வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வேலை விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.