மேலக்கட்டளையில் அமிர்தக் குளக்கரையை சுற்றிலும் நடப்பட்ட தென்னங்கன்றுகள்
முறையாக பராமரிக்கப்படுகிறதா என வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு;
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சிக்குட்பட்ட மேலகட்டளை பகுதியில் உள்ள அமிர்தக் குளக்கரையை சுற்றிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தென்னங்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பணித்தள பொறுப்பாளர் கே.வனிதா, வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் ராஜேஷ் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.