நாகர்கோவிலில் ஆசிரியைக்கு கொலை மிரட்டல் - வழக்கு
தலைமை ஆசிரியர் தாளாளர் மீது .;
நாகர்கோவில் அருகே ஆசரிபள்ளம் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரீதா ராணி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் போதிய மாணவர்கள் இல்லாமல் அந்த பள்ளி மூடப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை பிரிதா ராணியை அதே பகுதியில் செயல்பட்டு வரும் அதே நிறுவனத்தின் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிய மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆனால் அவரை பள்ளி தாளாளர் மற்று தலைமை ஆசிரியர் பணியில் சேர விடவில்லை. இதனை அடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆசிரியை பிரிதா ராணி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் பணி வழங்க உத்தரவிட்டது. இதனை அடுத்து பள்ளிக்குச் சென்ற பிரிதா ராணியை தாளாளர் தூண்டுதலின் பேரில் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இது குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் அவரை தூண்டி விட்ட தாளாளர் மீதும், வழக்கு பதிவு செய்துள்ளனர்.