அரசு புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற கோரியும், கடந்த 19/02/2009 சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் சேமநல நிதி ஸ்டாம்ப் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வழக்கறிஞர்கள் சேமநல தொகையை ரூபாய்-10-லட்சத்திலிருந்து குறைந்த பட்சம் ரூபாய்-25 லட்சமாக உயர்த்துவதற்கு வலியுறுத்தியும், இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வழக்கறிஞர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் விஸ்வராஜன் உள்ளிட்ட ஏராளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.