குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் வாலிபர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களும் முன்பு அவர் ஊருக்கு வந்த நிலையில், காதலி அவருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த பொண் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் இருந்து எஸ் எல் பி பள்ளி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காதலித்த வாலிபர் அங்கு வந்து வழிமறித்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இளம் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றார். ஆனால் அந்த இளம் பெண் வாலிபரின் மோட்டார்சைகளை பிடித்து இழுத்ததில் பெண் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். சம்பவம் அறிந்ததும் கோட்டார் போலீஸ் வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இதை அடுத்து போலீசார் பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.