வடலூர்: நகராட்சி முக்கிய அறிவிப்பு

வடலூர் நகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2025-02-19 11:23 GMT
வடலூர் நகராட்சியில் கடலூர் - விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி - சிதம்பரம் சாலையின் நான்கு முனை சந்திப்பிலிருந்து 200 மீட்டர் வரை சாலையின் இருபக்கங்களிலும் விளம்பர பேனர்கள் மற்றும் பிளக்ஸ்போர்டுகள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கும், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பள்ளி / கல்லூரி பகுதிகளில் விளம்பர பேனர்கள் மற்றும் பிளக்ஸ்போர்டுகள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விளம்பர பேனர்கள் மற்றும் பிளக்ஸ்போர்டுகள் அமைத்தால் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படுவதுடன், அதற்கான அபராத தொகை விதிக்கப்படும் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வடலூர் நகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News