வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவல முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-19 11:25 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வட்டாச்சியர், துணை வட்டாச்சியர்  நிலையில் பணியாற்றி, பதவி இறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களுக்காக அரசால் வழங்கப்பட்ட அரசாணையை அமல் படுத்த மறுத்து, குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்தி, மாற்றந்தான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும், நாமக்கல் மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஒ. வை கண்டித்து, குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிப். 21ல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போஏரட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் நிர்வாகிகள் ஆர்.ஐ. புவனேஸ்வரி, அண்ணாதுரை, காமராஜ், பழனிவேல், ரகு உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News