தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்;
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு கடைத்தெருவில், தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் காலை நேரத்தில் வரும் வெளிப்புற நோயாளிகளுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இரவு நேரத்தில் பணிபுரிய மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, தலைஞாயிறு பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். போராட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் சதீஷ், ஒன்றிய செயலாளர் சுவாமி மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.