ஆலங்குளம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு;
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், தென்காசி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிரூ10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அச்சன்குட்டம் ஊராட்சி லெஷ்மிபுரத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், திடக்கழிவு மேலாண்மையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், 15 வது நிதிக்குழு மானியத்திட்டம் 2024- 2025 இன் கீழ் 36 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திரா காந்தி தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினையும், ஊரக வீடு பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பழுது பார்க்கப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கருவந்தா ஊராட்சி சோலைசேரி கிராமத்தில் T.D.T.A நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளின் கல்வித்திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், மதிய உணவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரத்தினையும், மாணவ, மாணவியர்களின் வருகைப்பதிவேடு குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், பைப்லைன் அமைக்கப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும், ஊத்துமலை கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப்பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.