திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் கோரிக்கை அடங்கிய
பட்டையை அணிந்து பணி அமர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில், புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், கோரிக்கைகள் அடங்கிய பட்டையை அணிந்து நேற்று பணி அமர்வு போராட்டம் நடைப்பெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைத்ததை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பட்டையை அணிந்து பணி அமர்வு போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்திற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் தலைமை நிலைய செயலாளர் ரமேஷ், பணி மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகானந்தம், அதன் நிர்வாகி வடிவேல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த மணிபாரதி, பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கம் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.