சுசீந்திரம் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கன்னியாகுமரி;

Update: 2025-02-19 13:12 GMT
கன்னியாகுமரி அருகே தேரூர், மகாராஜா புரத்தில் மகாராஜ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினம் காலை மாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று இரவு கோவிலை பூட்டிய பின்,  இந்த கோவில் உண்டியலின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் ரூ. 700 ஐ திருடி சென்று விட்டனர்.       இன்று காலை உண்டியல் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கோவிலின் தலைவர் பாலச்சந்திரன் (55) சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News