புத்தக கண்காட்சி வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில்;

Update: 2025-02-19 13:38 GMT
கன்னியாகுமரி மாவட்ட புத்தக கண்காட்சி இன்று துவங்கியது. இதையொட்டி மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.      இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  செய்தி மக்கள் தொடர்பு துறையின்  அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் புத்தகக்கண்காட்சியினை அதிகளவில் பொதுமக்கள் வருகை புரிவதன் அவசியம் குறித்த விளம்பரப்படுத்தும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் இன்று (19.02.2025) கொடியசைந்து துவக்கி வைத்தார்.         இந்த கண்காட்சி  இன்று (19.02.2025) முதல் மார்ச் மாதம் 01.03.2025 வரை நாகர்கோவில் எஸ்.எல்.பி  அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் புத்தக திருவிழாவில்  சுமார் 120-க்கும் மேற்பட்ட  அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.        தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அரசு பேருந்துகளில் புத்தகக் கண்காட்சி குறித்த விளம்பர ஒட்டுவில்லையினை ஒட்டும் பணியினை துவக்கி வைத்ததோடு, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தக கண்காட்சி தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.         நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அலுவலக மேலாளர் சுப்பிரமணியன், போக்குவரத்து துறை துணை மேலாளர் ஜெரோலின், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News