மார்த்தாண்டம் : மேம்பாலத் தூண்களில் போஸ்டர்கள் அகற்றம்
குழித்துறை நகராட்சி;
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் குழித்துறை முதல் பம்மம் பகுதி வரை 2.5 கிலோமீட்டர் தொலைவு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 112 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்துக்கு அடியில் உள்ள தூண்களில் நோட்டீஸ் ஓட்டுவது, நெருக்கடியான இடங்களில் பிளக்ஸ் போர்டு வைப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவர்கள் மீது நடவடிக்கை பாயும் என நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதனை மீறி சிலர் பாலத்தில் உள்ள தூண்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். எனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை நகராட்சி சார்பில் வாட்டர் கன் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது. இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.