குமரியில் கடன் சார்ந்த திட்டம் வெளியீடு

நாகர்கோவில்;

Update: 2025-02-20 03:33 GMT
குமரி மாவட்டத்திற்கான 2025 - 26 நிதியாண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்துள்ளது. இந்த திட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் நேற்று வெளியிட்டார்.       இத்திட்டம் மாவட்டத்தின் நிதி தேவைகளை முன்னறிவித்து அதன் மூலம் நிலைத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் கிராமப்புற முன்னேற்றத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வகையில் மொத்தமாக 28,687.10 கோடி கடன் அளவீடு செய்யப்பட்டுள்ளது.       இதில் விவசாயத்திற்கு அதிகபட்சமாக ரூ 13, 280. 31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாவட்டத்தின் ஆண்டு கடன் திட்டம் உருவாக்குவதற்கான அடிப்படையாக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.       இந்த கூட்டத்தில் நபார்டு உதவி பொதுமையாளர் சுரேஷ் ராமலிங்கம், இந்திய ரிசர்வ் வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பதர் கலந்து கொண்டனர்.

Similar News