நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. அங்கு நெருக்கடியை குறைக்க ரவுண்டான அமைப்பதற்காக மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெஞ்சமின் வில்லியம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு ஆகியோருடன் முன் மாதிரி மணல்மூட்டைகளால் ரவுண்டான அமைப்பது தொடர்பாக இடத்தினை ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நேற்று 10 சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக செட்டிகுளம் சந்திப்பில் இருந்த உயர் கோபுரம் அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது. தற்போது ரவுண்டானாவின் சுற்றளவு 2 மீட்டர் அளவுக்கு உள்ளது. நேற்று இரவு நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் சென்றன.