கோடியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில்

பள்ளி ஆண்டு விழா;

Update: 2025-02-20 04:43 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் துரைராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் குமார், சரவணன், சமூக ஆர்வலர்கள் அனந்தராமன், பாலு, ஓய்வு பெற்ற ஆசிரியர் நாகராஜன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில், ஆசிரியர் சுந்தர வடிவேலு நன்றி கூறினார்.

Similar News