பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாவட்ட தலைவர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி;
எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பாக வருகின்ற 22ஆம் தேதி மேலப்பாளையம் பஜார் திடலில் மாலை 6 மணி அளவில் வக்ஃபு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியில் மாநில பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், தவத்திரு திருவடிக்குடில் அடிகளார் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கனி இன்று (பிப்ரவரி 20) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.