குருவிகுளத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான முகாம்;
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய கல்வி நடத்தும் 0 - 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ 26.02.2025 தேதி அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருவிகுளம் வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. இதில் மனநல மருத்துவர், எலும்பு மூட்டு மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வருகை தர உள்ளார்கள். சிறப்பு உபகரணங்களும், அடையாள அட்டைகளும் வழங்கப்பட உள்ளது. குருவிகளும் யூனியன் உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பயன்பெற்று கொள்ளுமாறு குருவிகுளம்வட்டார வள மையத்தில் அதிகாரி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.