புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கும் அரசு பள்ளி
பேட்டை காமராஜர் நகர்மன்ற அரசு மேல்நிலைப்பள்ளி;
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தனது பிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவிப்பதை செயல்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் புத்தகம் வழங்கி நூதன வாழ்த்து தெரிவிக்கும் அரசு பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.