காங்கேயம் அருகே சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த மகளிர் காவல் துறையினர்.;
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வந்தார்.அவருடைய தாய் தந்தை வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இந்த சிறுமிக்கு ஒரு அண்ணன் ஒரு அக்கா காங்கேயம் பகுதியில் திருமணம் முடிந்து வசித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து இருந்து கொள்ளலாம் என நினைத்து சிறுமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காங்கேயம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அக்கா வீட்டின் அருகே வசித்து வரும் சிலம்பரசன் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் பேசி பழகி வருவதை சிறுமியின் அண்ணன் கண்டித்துள்ளார். இதை சிறுமி சிலம்பரசன் இடம் தெரிவித்துள்ளார். அதற்கு சிலம்பரசன் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு சிறுமி இன்னும் திருமணம் வயது வரவில்லை என்று கூறியதாகவும் இளைஞர் கேட்காமல் சிலம்பரசன் கடந்த ஜூன் மாதம் சிறுமியை கட்டாயப்படுத்தி ஈரோட்டில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார். பாட்டி தாத்தா இருவரையும் கண்டித்து விட்டு இந்த சிறுமியை அவளின் உறவினர் வீட்டில் விட்டுட்டு வா எனக் கூறி வேலைக்குச் சென்றதாகவும் அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் சிலம்பரசன் சிறுமிக்கு அவர்களின் குலவிளக்கு படி கருப்பு பாசி மணி போட்டு திருமணம் செய்து கொண்டுள்ளான். பின்னர் அங்கிருந்து காங்கேயம் அழைத்து வந்தபோது இருவர் வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் சிவசக்தி காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமியை தங்க வைத்ததாகவும், திருமணமான இரண்டு வாரம் கழித்து சிலம்பரசன் சிறுமியிடம் நமக்குத் தான் திருமணம் ஆகிவிட்டது நாம் இருவரும் கணவன் மனைவி தானே என்று சொல்லி சிறுமியிடம் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார் . அதன் பின்னரும் சிறுமியிடம் பலமுறை உடலுறவு கொண்டதாகவும் இந்நிலையில் சிறுமி சரியாக வீட்டு வேலை செய்வதில்லை என்று சிலம்பரசன் சண்டை போட்டுக் கொண்டே இருந்ததாகவும் இதனால் கடந்த மாதம் 31 தேதி சண்டை போட்டு சிலம்பரசன் அடித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் சிறுமிக்கு தலைவலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி அவளின் அம்மாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்நோயாளியாக அனுமதித்தனர். பின்னர் 18 வயது முடிவடையாத சிறுமி என்பதால் மருத்துவமனையில் இருந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கியது மட்டும் இல்லாமல் சிறுமியை தாக்கிய இளைஞன் சிலம்பரசனை காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.