உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தும் கோவில் நிர்வாகம்

திருத்தணி சுப்பிரமணியசாமி மலை மீது கோயிலில் ஆபத்தான நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தி பொதுவெளியில் உணவுகள் தயார் செய்யும் அவலம், கண்டுகொள்ளாத அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை.;

Update: 2025-02-20 11:32 GMT
திருத்தணி சுப்பிரமணியசாமி மலை மீது கோயிலில் ஆபத்தான நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தி பொதுவெளியில் உணவுகள் தயார் செய்யும் அவலம், கண்டுகொள்ளாத அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் இந்த திருக்கோயில் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பின்பு இந்து சமய அறநிலைத்துறை ஏற்பாட்டில் மூன்று வேலை இலவச உணவு வழங்க மலைக் கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் சமையல் செய்யப்பட்டு உணவு அருந்தும் பகுதியில் அதன் அருகில் 500 பேர் அமரும் வகையில் உள்ளது சாப்பிடுவதற்கு உணவு வழங்கப்படுகிறது உணவு தயாரிக்கும் பகுதியில் மிக ஆபத்தான நிலையில் வீட்டுக்கு உபயோக சிலிண்டர்களை எரிவாயு உருளைகளை ஆபத்தான நிலையில் வைத்து மிக எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லாத வகையில் 50 அடி பள்ளத்தில் இப்படி ஒரு அன்னதான கூடங்கள் உள்ளது மேலும் மிக ஆபத்தான நிலையில் உள்ள இதனை நடவடிக்கை எடுக்க வேண்டிய திருத்தணி தீயணைப்பு படை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை இப்படி அபயகரமான முறையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவதற்கு ஆபத்தான நிலையில் இதனை தடுக்க வேண்டிய திருக்கோயில் நிர்வாகம் முன்வரவில்லை மேலும் வீட்டு உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய சிலிண்டரை எப்படி இவர்கள் வணிக பயன்பாட்டிற்காக திருத்தணி மலை கோவில் முழுவதும் திறந்த வெளியில் உணவு தயாரிக்கும் பகுதிக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது பேசும் பொருளாக உள்ளது இப்படி மலைக்கோவிலுக்கு வரும் முருக பக்தர்கள் விபத்தை சந்திக்க கூடிய வகையில் மலை கோவில் முழுவதும் உணவகங்கள் சாலையோர உணவகங்கள் கோயில் நிர்வாகத்தால் அனுமதியுடன் அளிக்கப்பட்ட உணவகங்கள் ஆகிவிட்டிருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் மூலமாக உணவகங்கள் தயாரிக்கப்படுகிறது இதை எதையும் கண்டுகொள்ளாமல் தீ விபத்து ஏற்பட்டால் விளைவு மிகப் பெரிதாக இருக்கும் என்று தெரிந்தும் இந்து சமய அறநிலை துறை அதிகாரி திருக்கோயில் அதிகாரி எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடனடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்னர்தான் அதிகாரிகளுக்கு விளைவுகள் தெரியுமா உரிய நடவடிக்கை என்பதை அதிகாரி எடுப்பதற்கு ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு தெரியாதா என்று வினா எழுப்பிய முருக பக்தர்கள்..

Similar News