அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் "முப்பெரும் விழா"

பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து;

Update: 2025-02-20 16:52 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் "முப்பெரும் விழா" பள்ளியின் தலைமையாசிரியர் வை.இராஜேந்திரன் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர் ம.இரமேசு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செ. சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.புஷ்பலதா மற்றும் ஆலம்பாடி அரசு மாணவர் விடுதி காப்பாளர் ராஜா முன்னிலையில் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்க தமிழ்ச் செம்மல்- முனைவர் தா. மாயக்கிருட்டிணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆண்டு விழா, தமிழ் கூடல் விழா, மற்றும் மணப்பாறையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பெருந்திறல் அணியில் கலந்து கொண்ட சாரணர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வெ. கண்ணன் அவர்கள் வரவேற்புரை நல்க, அறிவியல் ஆசிரியை ஆ.விஜயலெட்சுமி ஆண்டறிக்கை வாசிக்க, மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை த.ம.பிரகாஷ் மற்றும் அ. பாலகணேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, சே. அதியமான் அவர்கள் விழாவை ஒருங்கிணைப்பு செய்து இறுதியாக தமிழ் ஆசிரியர் கா. நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News