மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியின் 141 ம் ஆண்டு துவக்கவிழாவை கேக் வெட்டிகொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.
மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியின் 141 ம் ஆண்டு துவக்கவிழாவை கேக் வெட்டிகொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திருச்சி சாலை மற்றும் காந்தி நகரில் உள்ள காந்தி சிலைகளுக்கும் கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட அக்கட்சியினர் பின்னர் பொதுமக்கள், கடை வியாபாரிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் கேக் மற்றும் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் ரமேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராம் பிரகாஷ், மாவட்டச் செயலாளர்கள், வீரபாண்டியன், கோபாலகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் நசீம், மகிளா காங்கிரஸ் நகரத் தலைவி மேரி ராஜம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.