நத்தக்காடையூரில் காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை

நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை;

Update: 2025-02-21 00:50 GMT
நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் மாசி மாத காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு காலபைரவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நத்தக்காடையூர் நகரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை வருவாய் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காலபைரவர் வழிபாட்டு குழுவினர் செய்தி ருந்தனர்.

Similar News