தனியார் வாகன ஓட்டுனர் பாதை பிரச்சினை காரண்மாக அடித்துக் கொலை

குமாரபாளையம் அருகே தனியார் வாகன ஓட்டுனர் பாதை பிரச்சினை காரண்மாக அடித்துக் கொலை ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஐந்து பேர் கைது;

Update: 2025-02-21 01:03 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசு பெத்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருவார் அங்கமுத்து லாரி ஓட்டுனர் தொழில் செய்து வரும் இவர் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மகனிடம் சாக்கடை கழிவு நீர் தனது வீட்டு பகுதியில் வருவதாக கூறி அதனைத் தடுக்க ஆறுமுகம் மகன் ரமேஷிடம் தெரிவித்துள்ளார் இதில் ஆறுமுகம் மகன் ரமேஷிற்கும் அங்கமுத்துக்கும் அடிதடியானதில் அங்க முத்து கட்டையால் அடித்ததில் ரமேஷ் மண்டை உடைந்தது இதைக் கண்ட ரமேஷின் தந்தை ஆறுமுகம் தனது மகனை அழைத்துக் கொண்டு அங்கமுத்து வீட்டிற்கு சென்றனர் அப்போது அங்கிருந்த கடப்பாரை மற்றும் குண்டான் தடிகளால் அங்கமுத்துவை தாக்கினர் இதில் எதிர்பாராதவிதமாக சம்பவ இடத்திலேயே அங்கமுத்து உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் காவல்துறையினர் திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்தனர் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கு காரணமான ஆறுமுகம் அவரது மகன் ரமேஷ் மற்றொரு மகன் சுரேஷ் மனைவி தாயம்மாள் மகள் கமலா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாக்கடை நீர் காரணத்தால் ஆப்ட்டோ ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Similar News