டீசல் இல்லாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
பல்லடத்தில் டீசல் இல்லாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு;
பல்லடத்தில் உள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது அதிகளவில் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த நிலையில் நேற்று கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாசிலை அருகே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி ஒன்று திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது. அதன் ஓட்டுநர் இறங்கி பார்த்தபோது லாரியில் டீசல் இல்லாமல் நின்று போனது தெரியவந்தது. இதற்குள் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் ஓட்டுநரை விரைவாக டீசல் வாங்கி வரச் சொல்லி அறிவுறுத்தினர். இதையடுத்து டீசல் வாங்கி வரப்பட்டு லாரியின் டாங்கில் ஊற்றப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் 30 நிமிடம் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது.