குமரி மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பொறுப்பேற்பு

நாகர்கோவில்;

Update: 2025-02-21 03:44 GMT
கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஏடிஎஸ்பி ஆக இருந்த மோகன் தாஸ் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த நாகசங்கர் என்பவர் குமரி மாவட்ட சைபர் கிரைம் ஏ டி எஸ் பி யாக நியமிக்கப்பட்டார்.        அவர் நேற்று நாகர்கோவில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.  அதேபோல நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த வின்சென்ட் அன்பரசி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Similar News