குமரி :  ஆசிரியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் 

நாகர்கோவில்;

Update: 2025-02-21 04:03 GMT
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா,ஆசிரியர்களிடையே கலந்துரையாடும் நிகர்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அவர் கூறுகையில்:-          நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வின்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் நிலை குறித்தும்,  சென்ற ஆண்டு தேர்ச்சி, தற்போதைய அரையாண்டு மற்றும் முதலாம் திருப்புதல் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருந்த மதிப்பெண் மற்றும் பாடவாரியாக கேட்டறியப்பட்டது. 100% தேர்ச்சியை கொண்டு வருவதில் இடையூறாக இருக்கும் காரணிகள் என்ன என்பது குறித்தும், இவ்ஆண்டு, பொது தேர்வுக்கு குறுகிய கால அளவே இருப்பதால், எஞ்சிய நாட்களை மிகவும் பயனுள்ள முறையில் செலவிட அறிவுறுத்தப்பட்டது.  என கூறினார். ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News