கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இலந்தவிளை என்ற ஊரை சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரது மகன் விஜய் ஆனந்த் வயது (50). இவர் வக்கீல் என கூறிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மசாஜ் சென்டர் விபச்சார தொழில் செய்து வந்தார். காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தியும் நீதித்துறையை சேர்ந்தசிலர் பெயரையும் வருவாய்த்துறை அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் விபச்சார விடுதிகள் மசாஜ் சென்டர்களில் மாமுல் வசூலித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற காவல் அதிகாரியான ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றது. உடனடியாக தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்தவரை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது தப்பித்து ஓடும்போது கீழே விழுந்து கை உடைந்து உள்ளது. இதையடுத்து குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எனக் கூறப்படுகிறது. அவரது வீட்டை சோதனையிட்ட போது பெரிய அளவில் பணமும் யார் யாரு டன் தொடர்பில் இருந்தார்? எந்தெந்த அதிகாரிகள் தொடர்பில் இருந்தனர் போன்ற விபரங்களும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.