மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை 

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-02-21 10:23 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து தட்டாங்குட்டை ஊராட்சி, வட்டமலைக்காடு  விவசாயி   ரவி தெரிவித்ததாவது:  ஆண்டுதோறும் ஜூலை  மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நெல் நடவு பாசனத்திற்காக மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ஆண்டு நெல் அறுவடை முடிந்து தற்போது வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.  மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்து எள், சோளம், நிலக்கடலை பயிர்கள் நடவு  செய்வதற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News