விளையாட்டில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு 

விளையாட்டு;

Update: 2025-02-21 12:35 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள இடையாத்தி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி தேன்மொழி. இவர் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இவர்களது மகன் நிவாசன். இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்றது.  இப் போட்டியில் நிவாசன் மண்டல அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மேலும் சிறந்த கோல் கீப்பருக்கான விருதும் பெற்றுள்ளார்.  இது தவிர வாலிபால் போட்டியில் மண்டல அளவில் முதலிடமும், மாநில அளவில் நான்காவது இடமும், உதை பந்து போட்டியில் மண்டல அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். சாதனை படைத்துள்ள நிவாசனை பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி உள்ளனர்.

Similar News