அரசு பள்ளி மாணவியை பின் தொடர்ந்த இளைஞரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

 குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியை பின் தொடர்ந்த இளைஞரை பொதுமக்கள்  போலீசில் ஒப்படைத்தனர்.  ;

Update: 2025-02-21 15:12 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாவது படிக்கும் மாணவி ஒருவரை, நேற்று பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்கு செல்லும் போது இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளான். இதனை பொதுமக்கள் வசம் அந்த மாணவி சொல்ல, பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து கவனித்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசில் தகவல் தெரிவிக்க, போலீசார் நேரில் வந்து இளைஞரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரணை செய்து வருகிறார்.

Similar News