தேர்வுக்கு படிக்கச் சொன்ன பெற்றோர் : மாணவன் எடுத்த விபரீத முடிவு

தேர்வுக்கு படிக்கச் சொன்ன பெற்றோர் : மாணவன் எடுத்த விபரீத முடிவு;

Update: 2025-02-21 16:17 GMT
அதிகாலை 3 மணிக்கு எழுப்பி படிக்கச் சொன்ன பெற்றோர் 4 மணிக்கு மாணவன் எடுத்த விபரீத முடிவு நொளம்பூரில் +2 தேர்வில் அண்ணனை விட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என போட்டி போட்டு படித்துவந்த மாணவன் எடுத்த சோக முடிவு இன்று மீண்டும் தேர்வு எழுத தயாரான நிலையில் 14 வது மாடியில் இருந்து குதித்து தன் உயிரை மாய்த்து கொண்டு சோகம் 10 வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் எடுத்த நிலையில் +2 வகுப்பு தேர்விலும் 95 சதவிதம் மதிப்பெண் பெற வேண்டும் என திட்டமிட்ட நிலையில் உயிரை மாய்த்துகொண்ட சோகம் மறுதேர்வு எழுதி அதிக மதிப்பெண் வாங்கவேண்டும் என அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்ததாக பெற்றோரிடம் தெரிவித்திருந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற முடியாது என உயிரை மாய்த்துகொண்டதாக போலீசார் தகவல்* அம்பத்தூர், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நிக்சன்.இவர் பாரிமுனையில் சொந்தமாக தோல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகின்றார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்..மூத்த மகன் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் நிக்கல் ஆண்டனி(19) இவர் 10 வகுப்பு தேர்வில் 95 சவீதம் மதிப்பெண் எடுத்த நிலையில் கடந்தாண்டு நடந்த +2 தேர்வில் முறையாக தயாராகாத நிலையில் அனைத்து பாடத்திலும் மறுதேர்வு எழுத திட்டமிட்டு தோல்வி அடைந்துள்ளார். மீண்டும் மறுதேர்வில் அண்ணனை விட அதிகப்பெண் மதிப்பெண் என போட்டி போட்டு எழுத தயாராகி வந்துள்ளார்.. இந்நிலையில் ஆண்டனியின் பெற்றோர் +2 தேர்வில் அவர் தோல்வி அடைந்ததை தினமும் சுட்டிக்காட்டி வந்ததுடன் வருகிற தேர்விலாவது தேர்ச்சி பெற வேண்டும் என கூறி அவரை நள்ளிரவு எழுப்பி படிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.‌ இன்று காலை வழக்கம் போல் பெற்றோர் ஆண்டனியை சுமார் 3 மணியளவில் எழுப்பி படிக்குமாறு தெரிவித்துள்ளனர்.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் நிக்கல் ஆண்டனி அதிகாலை வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.. பின்னர் முகப்பேர் மேற்கு பகுதியை சுற்றி வந்த அவர் நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள வஜ்ரா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சுவர் ஏறி உள்ளே குதித்து 14வது மாடிக்கு சென்றுள்ளார்.. சிலி நிமிடங்களில் ஆண்டனி திடீரென 14 மாடியில் இருந்து கீழே குதித்தூள்ளார் . சத்தம் கேட்டு ஓடிவந்த குடியிருப்பு காவலாளிகள் அடையாளம் தெரியாத சிறுவன் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடனே அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.. பின்னர் குடியிருப்பு வாசிகள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் நொளம்பூர் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்ட சிறுவன் முகப்பு கிழக்கு பகுதியை சேர்ந்த நிக்கல் ஆண்டனி என்பது தெரிய வந்ததை அடுத்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.‌ பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட போதே நடந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

Similar News