உலக தாய்மொழி  தின உறுதி மொழி.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  உலக தாய்மொழி   தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.;

Update: 2025-02-21 16:18 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  உலக தாய்மொழி   தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். இதில் முதல்வர் ரேணுகா வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேச்சுபோட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டியத்தின் மூலம் தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி மாணவ, மாணவியர் எடுத்துரைத்தனர். பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ரமேஷ், ஞானதீபன் உள்பட மாணவர், மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.

Similar News