சர்வதேச தாய்மொழி திருநாளை முன்னிட்டு கருத்தரங்கம்

சர்வதேச தாய்மொழி நாளை முன்னிட்டு அகழ் கலை இலக்கிய மன்றம், பெரம்பலூர் - தமிழ்நாடு இணைந்து, “இனியவை நாற்பது” என்ற நீதி இலக்கியத்திற்கான சிறப்புக் கருத்தரங்கை நடத்தியது. இதில் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 40 பேர், இனியவை நாற்பது இலக்கியத்தில் இருக்கும் 40 பாடல்கள்;

Update: 2025-02-21 16:25 GMT
சர்வதேச தாய்மொழி நாளை முன்னிட்டு, பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம், பெரம்பலூர் - தமிழ்நாடு இணைந்து, “இனியவை நாற்பது” என்ற நீதி இலக்கியத்திற்கான சிறப்புக் கருத்தரங்கை நடத்தியது. இதில் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 40 பேர், இனியவை நாற்பது இலக்கியத்தில் இருக்கும் 40 பாடல்கள் சொல்லும் இனியவைகளை பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தனர். அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்கள் கட்டுரைகளாக மாற்றப்பட்டு, கையெழுத்து பிரதிப் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிருத்தியாலயா நாட்டியப் பள்ளி மாணவர்கள், கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கான திருக்குறள் நாட்டியத்தை வழங்கினார்கள். கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் மு. வெண்ணிலா வரவேற்புரை வழங்கினார். கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் முனைவர் கி. மித்ரா முன்னிலையுரை ஆற்றினார். கிறிஸ்டியன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் நிறுவனத் தலைவர் முனைவர் மு. கிறிஸ்டோபர் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். மருத்துவர்கள் ரா. புவனேஸ்வரி மற்றும் பி. விஜய் ஆனந்த், அகழ் நிறுவனர் செ. வினோதினி போன்றோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் சு. முனியலட்சுமி நன்றியுரை வழங்கினார். விழாவினை அகழ் செயலாளர் சி. ஸ்ரீகாந்த் ஒருங்கிணைத்து தொகுத்து நடத்தினார். கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் விழாவை சிறப்பாக நடத்திச் சென்றனர். மாணவர்கள் ஆர்வமாக பங்கு கொண்டனர். வாழ்க்கையில் என்றும் இனிய குணங்கள், இனிய சொற்கள், இனிய நடத்தைகளையே கொண்டு சிறப்பாக வாழ வேண்டும் என்ற கருத்து, மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு, இந்நிகழ்வு சக ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News