காங்கேயம் அரசு கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

காங்கேயம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி;

Update: 2025-02-22 02:05 GMT
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கிலதுறை சார்பில் வாங்க பேசலாம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி களம் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். பேராசிரியர் சி.குமாரசாமி அனைவரையும் வரவேற்றார். இதில் கல்லூரி பேராசிரியர் க.சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி பேராசிரியர் சி.சதீஷ்குமார் மேடைப்பேச்சு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கி பேசினார். மேலும் ஆங்கிலத்துறை பேராசிரியர் வா.பிரகாஷ் ஆங்கி லத்துறை மாணவர்கள் திறன் மேம்பட இந்த களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார். இதன் நிறைவாக முதுகலை 2-ம் ஆண்டு தமிழ் துறை மாணவன் ஆ.கார்த்திகேயன் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதி உள்ள தீட்டு என்னும் சிறுகதை தொகுப்பு ஆய்வு செய்து உரையாக வழங்கினார். மேலும் தமிழ் துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ஆர்.ஸ்ரீமதி, யாரும் எனும் தலைப்பில் கவிதை வாசித்தார்.முடிவில் தமிழ் துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி மு.சங்கீதா நன்றி கூறினார்.

Similar News