திருச்சி: வீட்டின் பூட்டை உடைத்து நகை மோட்டார் சைக்கிள் திருட்டு

பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் பிரியாணி சமைக்கும் பெரிய அண்டா ஆகியவை திருட்டு;

Update: 2025-02-22 02:43 GMT
சமயபுரத்தை அடுத்த மேள வாளாடி அருகே உள்ள புதுக்குடி ஊராட்சி காந்திநகர், கே.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரோலிங்டன். இவரது மனைவி யாஸ்மின்பேகம் (வயது23). இவர்களுக்கு ஹாஜிரா (3) என்ற மகள் உள்ளார். ரோலிங்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், யாஸ்மின் பேகம் புள்ளம்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தி னம் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கேட் மற்றும் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 4 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் பிரியாணி சமைக்கும் பெரிய அண்டா ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சம யபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News