கடவூர் தாலுகா, கிழக்கு அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் இனாம்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம் படித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று தரகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்று சிந்தாமணிபட்டி போலீசார், கஞ்சா விற்ற அங்கமுத்து மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.
