ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆசை (22). இவருக்கு கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தூங்கும் போது கெட்ட கனவுகளாக வந்துள்ளது. இதனால் மன அழுத்தம் இருப்பதாக ஆசை பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்.19 அன்று வேலைக்கு சென்ற அவர் பெரியகுளம் பகுதியில் பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (பிப்.21) ஆசை உயிரிழந்தார். தென்கரை காவல்துறையினர் விசாரணை.